தலைப்பு செய்திகள்
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு முதல்வர் அதிரடி !
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் அதில் மருத்துவ வல்லுனர்கள் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பங்கேற்றார்.
மேலும் பல அமைச்சர்கள் பங்கேற்றனர் தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் 31 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது இதில் புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 23 ஆண்கள் மற்றும் 29 பெண்கள் அடங்குவர் தற்பொழுது புதிய சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது அதன்படி திருமண நிகழ்ச்சிகளில் சுமார் 500 பேர் பங்கேற்கலாம் மேலும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 250 பேர் பங்கேற்கலாம்.
மேலும் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும்பொழுது முக கவசம் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்க அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் ஓரிரு நாட்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்து அறிக்கை வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.