தலைப்பு செய்திகள்
தமிழகத்திற்கு வரும் 5 நாட்கள் எச்சரிக்கை !

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்னும் சில நாட்கள் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் தொடர்ந்து ஐந்து நாட்கள் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என கூறப்பட்டிருக்கிறது.
வங்க கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் இந்து சூறாவளி காற்று 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
