BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

துபாய் எக்ஸ்போவில் உள்ள தமிழ்நாடு அரங்கை முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்.

அரசு முறை பயணமாக துபாய் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது வழக்கமான உடையில் இல்லாமல் மாடர்ன் உடையில் சென்றிருக்கிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று துபாய்க்கு பயணம் மேற்கொண்டார். நான்கு நாள் அரசு முறை பயணமாக துபாய் மற்றும் அபுதாபிக்கு செல்கிறார். இதற்காக அவர் தனது வீட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

அப்போது, முதலமைச்சரை பார்த்த திமுகவினர் அவரை ஆச்சர்யத்துடன் பார்த்தனர். முதலமைச்சரை வேஷ்டி, சட்டையில் பார்த்த அவர்களுக்கு, மாடர்ன் உடையில் வந்து ஆச்சர்யம் கொடுத்தார். பேண்ட், சட்டையின் ஜர்கின் போட்டுக்கொண்டிருந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க சென்னையில் இருந்து தனி விமான மூலம் துபாய் சென்றுள்ள முதலமைச்சர் உலக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை இன்று திறந்து வைக்கிறார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )