தலைப்பு செய்திகள்
நீட் விலக்கு மசோதா இதுவரை வரவில்லை: ஆ.ராசா கேள்விக்கு அமைச்சர் பதில்.

“தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை” என்று மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை 142 நாட்களுக்கு பிறகு சபாநாயகருக்கே திருப்பி அனுப்பினார் ஆளுநர். இந்த நடவடிக்கை தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. இந்நிலையில், 2-வது முறையாக நீட் விலக்கு மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவையும் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார்.
CATEGORIES முக்கியச் செய்திகள்

