BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

ஈரோட்டிலிருந்து ஊட்டிக்கு வந்த ஒரே ஒரு பேருந்து.

ஈரோட்டிலிருந்து ஊட்டிக்கு வந்த ஒரே ஒரு பேருந்து

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், பொது போக்குவரத்தினை தனியார் மயமாக்குவதை கண்டித்தும் நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் இன்றும், நாளையும் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. வேலை நிறுத்தத்தின் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் சரிவர இயக்கப்படவில்லை. பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

உதகை மத்திய பேருந்து நிலையத்திற்கு காலை ஒரே ஒரு அரசுப் பேருந்து ஈரோட்டிலிருந்து வந்தது. பின்னர் அந்த பேருந்து கூடலூர் புறப்பட்டு சென்றது.

நீலகிரி மாவட்டத்தில் பேருந்துகள் இயங்காததால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். வேலை நிறுத்தத்தையொட்டி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் குறைந்தஅளவு இயக்கப்படுவதால் ஆட்டோக்கள் மற்றும் மினி பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது

உதகை மத்திய பேருந்து நிலையத்திற்கு காலை ஒரே ஒரு பேருந்து ஈரோட்டிலிருந்து வந்தது. அந்த பேருந்து பின்னர் கூடலூர் புறப்பட்டு சென்றது. அந்த பேருந்து ஓட்டுநருக்கு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மாவட்டத்தில் பெரும்பாலான அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தற்காலிக ஊழியர்கள் மற்றும் சில ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். இதனால், அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டன.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )