தலைப்பு செய்திகள்
பள்ளிப் பாடத் திட்டத்தில் மனித உரிமைகள் குறித்து பாட திட்டம் மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பாஸ்கரன் தகவல்.

தமிழ்நாட்டில் பள்ளி பாடத்திட்டங்களில் மனித உரிமைகள் குறித்து தனி பாட திட்டம் கொண்டுவருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய தலைவர் பாஸ்கரன் கூறினார்.
தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய தலைவர் பாஸ்கரன் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது
மனித உரிமைகள் குறித்து தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக கொண்டு வருவதற்கு தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது இதற்காக தமிழக அரசிடம் மனித உரிமை ஆணையம் தொடர்பு கொண்டு பேசி உள்ளது இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை விரைவில் சந்தித்து பேச இருக்கிறோம் கல்வித்துறை செயலாளரும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் மனித உரிமை மீறல்கள் குறைவாகவே உள்ளது என்று கூறிய அவர் மனித உரிமை ஆணையத்திற்கு வரும் மனுக்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளை ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு அதிகமாக இருப்பதால் மனுக்கள் அதிக அளவில் வருகிறது கடந்த ஆண்டு 15 ஆயிரம் மனுக்கள் வந்துள்ளது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எட்டாயிரம் முதல் பத்தாயிரம் மனுக்கள் மட்டுமே வந்தன மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகள் காலதாமதம் ஆகிறது என்று கூறுவது சரியல்ல மனித உரிமைகள் ஆணையத்திற்கு வரும் புகார்கள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது சில மனுக்கள் குறித்து விசாரணை செய்து அதிகாரிகள் அறிக்கை தர வேண்டியது இருப்பதால் அதன் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதற்தாக சிறிது கால அவகாசம் ஏற்படும் பெரும்பாலான வழக்குகள் விரைவாக முடிக்கப்படுகிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
