தலைப்பு செய்திகள்
`22 விதிகளை கடைப்பிடிக்கணும்’- தனியார் பள்ளிகளுக்கு சென்ற சுற்றறிக்கை.

பள்ளி வாகனங்களை ஓட்டும்போது, சினிமா பாடல்களை போடக்கூடாது என்பது உள்பட 22 வகையான விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று சென்னையில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.
சென்னையில் நேற்று 2-ம் வகுப்பு மாணவன் திக் ஷித் பள்ளி வளாகத்திலேயே வேன் மோதி உயிரிழந்ததைத் தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். 22 வகையான விதிகளை கடைப்பிடிக்குமாறு சென்னையில் உள்ள 500 தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
CATEGORIES முக்கியச் செய்திகள்
