தலைப்பு செய்திகள்
வல்லம், பிப்.20- தஞ்சையில் கடன் தொல்லை காரணமாக டெய்லர் ஒருவர் கடையிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சை மாதாக்கோட்டை ரோடு அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் விக்டர் இருதயராஜ் (46). இவர் அறிஞர் அண்ணா நகர் மெயின் ரோடு பகுதியில் வாடகை இடத்தில் டெய்லர் கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்நிலையில் இவர் கடன் பிரச்சினையால் அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது இதனால் மனமுடைந்து இருந்த விக்டர் இருதயராஜ் சம்பவத்தன்று தனது கடையிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விக்டர் இருதயராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விக்டர் இருதயராஜ் மகன் பில்கேட்ஸ் ஜாய்ஸ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளார்.
CATEGORIES தஞ்சாவூர்