BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

`பெரியார் இல்லையென்றால் நாமெல்லோரும் இல்லை’- முதல்வர் ஸ்டாலின்.

`பெரியார் இல்லையென்றால் நாமெல்லோரும் இல்லை'- முதல்வர் ஸ்டாலின்

“தந்தை பெரியார் இல்லையென்றால் நாமெல்லோரும் இல்லை. பெரியார், அண்ணா, கருணாநிதியால் தமிழருக்கு எதிரான சூழ்ச்சிகள் எடுபடாமல் போனது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் ஒழிந்தியாம்பட்டுவில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திமுக ஆட்சியில் நிம்மதியாக உள்ளதாக மக்கள் பாராட்டி வருகின்றனர். தந்தை பெரியார் இல்லையென்றால் நாமெல்லோரும் இல்லை, தமிழகத்தின் முன்னேற்றமும் இல்லை. பெரியார், அண்ணா, கருணாநிதியால் தமிழருக்கு எதிரான சூழ்ச்சிகள் எடுபடாமல் போனது. பெரியார் கண்ட கனவுப்படி தமிழகம் எங்கும் சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து சமூகத்தினரும் வசிக்க கூடிய முதல் சமத்துவபுரம் தமிழகத்தில் 1997-ல் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சிக்கான ஒரு உதாரணமே சமத்துவபுரங்கள் ஆகும். கொழுவாரி சமத்துவபுர திட்டத்திற்கு 2010ஆம் ஆண்டிலேயே நிதி ஒதுக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தால் திட்டம் கைவிடப்பட்டது. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கிய திட்டத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி. உள்ளாட்சித்துறை மக்களுக்கு மிகவும் நெருக்கமாக, மக்களோடு மக்களாக இருக்கும் துறை, ஆகவே மக்களுக்கான திட்டங்களை உடனடியாக செய்து கொடுக்கும் துறையாக உள்ளாட்சித் துறை இருக்க வேண்டும்” என கூறினார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )