தலைப்பு செய்திகள்
இன்று மீண்டும் கூடுகிறது சட்டமன்றம்!

துறை வாரியான மானியக் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.
தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அடுத்தநாள் வேளாண் பட்ஜெட் தாக்கலானது. இரண்டு பட்ஜெட் மீதும் கடந்த 24ஆம் தேதி வரையில் விவாதம் நடைபெற்றது. அமைச்சர்கள் பதிலுரைக்கு பிறகு சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் துறை வாரியான மானியக் கோரிக்கையை நிறைவேற்ற சட்டசபை கூட்டம் இன்று மீண்டும் கூடுகிறது. முதல் நாள் நீர்வளத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

இதில் திமுக., அதிமுக உள்ளிட்ட சட்டமன்ற கட்சிகளின் உறுப்பினர்கள் பேசுவார்கள். இறுதியில் அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து பேசுவார். அனல் பறக்கும் விவாதங்கள் ஏற்பட்டால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிப்பார்.
இதே போல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் குறுக்கிட்டு பேசுவார். இதே போல் ஒவ்வொரு நாளும் துறை ரீதியாக மானியக் கோரிக்கைகள் மீதும் விவாதம் நடைபெறும்.

அதேநேரத்தில், முக்கிய அறிவிப்புகள் இருந்தால் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார். அதன்படி இந்தாண்டு பல்வேறு அறிவிப்புகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, சொத்து வரி உயர்வு, நீட் தேர்வு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, திமுக.வின் தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளான அதிமுக., பாஜக திட்டமிட்டுள்ளன. எனவே தினமும் மானிய கோரிக்கையின் போது அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும்.
சட்டசபை கூட்டம் மதியம் 2 மணி வரை நடைபெறும் என்பதால் கோட்டையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
