BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தமிழக சட்டசபையில் துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை.

தமிழக சட்டசபையில் துறைகள் வாரியாக மானியக் கோரிக்கைகளை, விவாதம் கடந்த 6-ம் தேதி முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று உயர் கல்வி, பள்ளி கல்வித்துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. றுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேச உள்ளனர். இறுதியாக தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிட உள்ளாதாக தகவல் வெளியாகி உள்ளது.

விவசாயிகளுக்கு பாதிப்பின்றி தொழிற்பூங்காக்களுக்கு நிலம் எடுப்பு:  சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் | Land acquisition for  industrial parks ...

அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்:
விராலிமலையில் இசைப்பள்ளி தொடங்க அரசு ஆவன செய்யுமா என அதிமுக உறுப்பினர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார். விராலிமலையில் தற்போதைக்கு இசைப்பள்ளி தொடங்கப்படாது; தேவைப்பட்டால் எதிர்காலத்தில் இசைப்பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார்.
அமைச்சர் கே.என்.நேரு பதில்:
திருவண்ணாமலை கோயிலில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்படுமா? என சட்டசபை துணை சபாநாயகர் பிச்சாண்டி கேள்வி எழுப்பினார். அதற்கு வியாபார பகுதிகளில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார். சென்னையில் ராயபுரம் எம்.சி. சாலையில் பன்னடுக்கு வாகன நிறுத்தம், கட்டிடம் போல் அல்லாமல் இரும்பு பீம் கொண்டு எளிய செலவில் கட்டி முடிப்பது குறித்து திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்:
அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு ஆண்டு வருமான வரம்பு நீக்கப்பட்டு முதல்வர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்படுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் பேசினார். 1,700 மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டம் செயல்பட்டு வருகிறது எனவும் தகவல் தெரிவித்தார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )