தலைப்பு செய்திகள்
`விரைந்து நடவடிக்கை எடுத்திட்டீங்க; மக்கள் பயனடைவார்கள்’
தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு.

இ-சேவை முறையில் வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும்போது, அது நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை 1000 எழுத்துகளில் தெரிவிக்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பித்த தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
சேலத்தை சேர்ந்த சின்னப்பையன் என்பவர் கடந்த 2021-ல் இறந்தபிறகு வாரிசு சான்றிதழ் கோரி அரசின் இ-சேவை மூலம் அவரது தாயார் சின்னப்பிள்ளை என்பவர் அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை தெளிவாக அளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். வட்டாட்சியர் பெயரில் வழங்கப்பட்ட உத்தரவில் “விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது” என்று மட்டுமே இருந்ததாக தெரிவித்துள்ளார்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
