தலைப்பு செய்திகள்
ஒரு ரேஷன் கடைக்கு இனி 1,000 கார்டுதான்: அமைச்சர் அறிவிப்பு.

“ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளை பிரிப்பது அரசின் பரிசீலனையில் உள்ளது” என்று சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று உறுப்பினர்களின் பல்வேறு கேள்விக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, பகுதி நேர ரேஷன் கடை அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளை பிரிப்பது அரசின் பரிசீலனையில் உள்ளது.
CATEGORIES முக்கியச் செய்திகள்

