தலைப்பு செய்திகள்
பேருந்துகளில் கட்டண கொள்ளை !

தமிழகத்தில் நான்கு நாள்கள் தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்குச் செல்ல மக்கள் படையெடுத்து கோயம்பேடு பேருந்து நிலையங்களில் குவிந்த நிலையில் அரசு பேருந்துகளில் சிறப்பு பேருந்து இல்லாததால் ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டண உயர்வு. அதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகள் அவதிப்பட்டனர். சென்னையில் இருந்து நெல்லை செல்ல ரூ.3500 வசூலிப்பதாகவும்,கோவையிலிருந்து தென்காசி செல்ல 900ஆயிரம் ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை கட்டணம் என பயணிகளிடம் இருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பல அரசு முன்பதிவு மையங்களில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் வண்ணம் அரசு பேருந்து முன்பதிவுக்கு வரும் பயணிகளிடம் ஆம்னி பேருந்துகளுக்கு முன்பதிவு செய்து கொடுத்து கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
