BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு 12 நாட்கள் மட்டும் தான் கோடை விடுமுறை.

அமைச்சரின் புதிய தகவல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை விடுவது தொடர்பாக இன்று முடிவு அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக முழுமையாக பள்ளிகள் செயல்படாமல் ஆன்-லைன் வாயிலாகவே பள்ளிகள் செயல்பட்டு வந்தது. இந்த ஆண்டும் முதல் இரண்டு மாதங்கள் பள்ளி நடைபெறாமல் ஆன் வழியில் பாடங்கள் நடத்தப்பட்டன. 3 ஆம் அலை கொரோனா பாதிப்பு முடிவடைந்து தற்போது வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. வழக்கமாக மார்ச் மாதம் முதல் வாரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்கி மாத இறுதிக்குள் தேர்வுகள் முடிவடையும், இதே போல 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஏப்ரல் மாதத்திற்குள்ளாகவே தேர்வுகள் முடிவடைந்துவிடும். இந்தநிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக இந்தாண்டு தேர்வுகள் தாமதமாக மே மாதம் நடைபெறவுள்ளது. இதை போல 1 வகுப்பு முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் தாமதமாக நடைபெறுகிறது.

எனவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது விடப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் தாமதமாக தொடங்கப்பட்டதால் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக கூறினார். 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 50 சதவிகிதம் முதல் 65 சதவிகிதம் வரை பாட்டதிட்டங்களை நடத்தும் படி கூறியுள்ளதாக தெரிவித்தார். பெரும்பாலான பள்ளிகளில் முழுமையாக பாடத்திட்டங்களை முடித்துள்ளதாகவும் ஒரு சில பள்ளிகளில் இன்னும் 5 சதவகித பாடங்கள் முடிவடையாமல் உள்ளதாகவும் அதனை இந்த மாத இறுத்திக்குள் முடிக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படாது எனவும் தெரிவித்தார். மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாக வேலை நாட்களை குறைக்கும் படி கோரிக்கை வந்துள்ளதாக தெரிவித்தவர், தொடக்கப்ள்ளி மாணவர்களுக்கு சனி கிழமை விடுமுறை விடுவது தொடர்பாக இன்று அல்லது நாளை முடிவெடுக்கப்படும் என கூறினார்.

 

கோடை விடுமுறையை பொறுத்தவரை பள்ளிகளின் வகுப்புகளை பொறுத்து விடப்படும் என தெரிவித்தார். 10 அல்லது 12 நாட்கள் விடுமுறை விடப்படும் என கூறினார். 10ஆம் வகுப்பு, 12 வகுப்பு தகுந்தாற் போல் விடுமுறை விடப்படும் என கூறினார். உடனடியாக அடுத்த வருடத்திற்கான பாடத்திட்டம் தொடங்க வேண்டிய நிலை இருப்பதாகவும் தெரிவித்தார். அடுத்த ஒரு வருடத்திற்கு இதே போலத்தால் நிலைமை இருக்கும் என தெரிவித்தவர், இயல்பு நிலை திரும்பினால் மட்டுமே கோடை விடுமறை ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் விடப்படும் என தெரிவித்தார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )