BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

‘யாராலும் திருட முடியாத சொத்து கல்வி!’: முதல்வர் ஸ்டாலின்.

PM Modi, Kerala CM Pinarayi Vijayan and others greet M K Stalin | Chennai  News - Times of India

” மாணவ, மாணவிகள் கற்கும் கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மேல்நிலை பள்ளியில் “நம் பள்ளி நம் பெருமை” என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில்,” 37,557 அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கான முயற்சியாக புதிய மேலாண்மை குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன. மாணவ, மாணவிகள் கற்கும் கல்விதான் திருட யாராலும் முடியாத சொத்து. திரும்ப கிடைக்காத மகிழ்ச்சியான காலம் பள்ளிப்பருவம். பெற்றோர்கள் தங்களது கனவுகளை குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது. பள்ளி கல்விக்கு தமிழக அரசு மிக மிக முக்கியத்துவம் அளித்து வருகிறது” என்று கூறினார்.

“பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.36,895 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பள்ளியின் தேவைகள் என்னென்ன என்பதை அறிந்து மேலாண்மை குழு செயல்பட வேண்டும் என்று மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்க மேலாண்மை குழுக்கள் செயல்பட வேண்டும்” என்றும் கூறினார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )