BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

காட்பாடி ரயில் நிலையம் வழியாக ரயிலில் கஞ்சா கடந்த முயன்ற 15 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.!

வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையம் வழியாக ரயிலில் ஆந்திராவில் இருந்து சட்டவிரோதமாக கஞ்சா கடத்த இருப்பதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள தமிழக அரசு இருப்புப்பாதை காவல் துறை ஆய்வாளர் சித்ரா தலைமையில்,

காவலர்கள் சண்முகசுந்தரம், குமார், நரேந்திர குமார், தேவேந்திரன், ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று  காலை காட்பாடி வந்த, அத்தியா ரயில் நிலையத்திலிருந்து யஸ்வந்த்பூர் ரயில் நிலையம் வரை செல்லும் பயணிகள் விரைவு வண்டியில் சோதனை செய்தபோது

S-1 பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த இரண்டு பைகளை சோதனையிட்டதில் அதில் 24 பாக்கெட்டுகளில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சுமார் 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்திய மர்ம நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட்டம் பிடித்துள்ளனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )