BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

உயர்நீதிமன்ற நீதிபதி கார் விபத்து! மருத்துவமனையில் சிகிச்சை! சொகுசு கார் மீது மோதியது!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாலா சென்ற கார், சென்னை பட்டினப்பாக்கத்தில் சொகுசு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் நீதிபதி மாலா காயமடைந்தார்.

உயர்நீதிமன்ற நீதிபதி மாலா, பசுமைவழி சாலை நீதிபதிகள் குடியிருப்பில் இருந்து நொச்சிக்குப்பம் லூப் சாலை வழியாக தனது காரில் உயர்நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது பட்டினப்பாக்கத்தில் சென்று கொண்டிருந்த நீதிபதி மாலாவின் கார், எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது. இதனால் பின் இருக்கையில் அமர்ந்திருந்த நீதிபதி மாலாவுக்கும், கார் ஓட்டுனருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

லூப் சாலை வழியாக மெரினா கடற்கரை சாலை நோக்கி செல்லும் போது, வேகத்தடை இருந்ததை கவனிக்காமல் வந்த பென்ஸ் ரக கார் ஒன்று, திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த காருக்கு பின்னால் வந்த நீதிபதியின் கார் பென்ஸ் கார் மீது மோதியுள்ளது.

வேகத்தடை அடையாளங்கள் எதுவும் சாலையில் இல்லாததும், சிறு சிறு கடைகள் லூப் சாலையில் இயங்கி வருவதும் இங்கு அடிக்கடி நடக்கும் சாலை விபத்துகளுக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )