BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

“திருக்கோயில்களிலும் திருநங்கைகளுக்கு பணி வழங்க வேண்டும்” என்று சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்திப் பேசினார்.

ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி; நிறைவேற உதவுவாரா உதயநிதி?' - காத்திருக்கும்  மருத்துவர்கள்! will Udhayanidhi help to accomplish the assurance given by  stalin?

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ” பள்ளிப் பருவத்திலேயே திருநங்கைகளாக மாறும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. அதை ஆசிரியர்கள் உணர வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. 18 வயதுக்குட்பட்ட திருநங்கைகள் அனைவருக்கும் மாத உதவித்தொகை வழங்க வேண்டும்.

கல்வித் தகுதிக்கேற்ப பணியை திருநங்கைகளுக்கு ஒதுக்கித்தந்தால் அவர்களுக்கு பேரூதவியாக இருக்கும். திருக்கோயில்களிலும் திருநங்கைகளுக்கு பணி வழங்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்,” நாற்பது சதவீத ஊனத்திறன் உடையவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு முழு நேர ஆணையம் அமைக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )