தலைப்பு செய்திகள்
முதற்கட்டமாக 10 திருக்கோயில்களில் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம்.

முதற்கட்டமாக 10 திருக்கோயில்களில் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.
சென்னை வடபழனி, அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில், பழனி அருள்மிகு தண்டாயுதபாணிசுவமி திருக்கோயில், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருத்தணி அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், திருவேற்காடு அருள்மிகு தேவிகருமாரியம்மன் திருக்கோயில், திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், மருதமலைஅருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், பண்ணாரி அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், உட்பட 10 திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை கணொலி காட்சி வாயிலாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.


