தலைப்பு செய்திகள்
சர்வதேச யோகா தினத்தை ஒட்டி தஞ்சை உள்ளிட்ட 6 இடங்களில் அஞ்சல் துறை ஊழியர்கள் யோகா விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
சர்வதேச யோகா தினத்தை ஒட்டி தஞ்சை உள்ளிட்ட 6 இடங்களில் அஞ்சல் துறை ஊழியர்கள் யோகா விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
சர்வதேச யோகா தினம் ஜுன் 21 ம் தேதி கொண்டாடப்படுகிறது இந்த ஆண்டு இந்திய அஞ்சல் துறை சார்பில் 100 இடங்களில் அஞ்சல் ஊழியர்கள் யோகா செய்ய உள்ளனர் இதையொட்டி தமிழகத்தில் சென்னை, மகாபலிபுரம், கன்னியாகுமரி, மதுரை, கோவை, தஞ்சாவூர் ஆகிய 6 இடங்களில் இன்று யோகாசன விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழரின் கட்டிட கலைக்கு சான்றாக விளங்கும் தஞ்சாவூர் பெரிய கோவிலின் பின்புறம் உள்ள இடத்தில் யோகா தின ஒத்திகை நடைபெற்றது.
இதில் திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை இயக்குனர் ரவீந்திரன், தஞ்சை கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் தஞ்சை கோட்டத்தை சேர்ந்த அஞ்சலக ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு சிறப்பு பயிற்சி பெற்ற யோகா குழுவினர் யோகா கற்றுக் கொடுத்தனர். யோகாசனம் செய்வதால் உடல் வலிமை பெறும், நோய்கள் அண்டாது, மன புத்துணர்ச்சி அடையும் இன்னும் பல்வேறு நன்மைகள் உள்ளன. முறைப்படி தினமும் யோகா செய்வதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.