தலைப்பு செய்திகள்
திருச்சியில் அரசு நிலத்தை பட்டா போட்டு விற்கும் திருச்சியைச் சேர்ந்த திமுக பிரமுகர் – நிலத்தை மீட்க போராடும் உரிமையாளர்.
திருச்சியில் உள்ள திமுக பிரமுகர் ஒருவர் அரசுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தை பட்டா போட்டு விற்றுவிட்டார். மேலும் தன்னுடைய நிலத்தையும் அனுமதியின்றி பலருக்கும் விற்று வருகிறார் என திருச்சி, தென்னூர், அண்ணாநகரில் வசித்து வரும் ஹரிகிருஷ்ணா என்பவர் ஒரு புகார் ஒன்றை தெரிவித்தார்.
திருச்சி, கம்பரசம்பேட்டையில் ரூ.100 கோடி மதிப்பு கொண்ட 16.64 ஏக்கர் நிலம் என் தந்தையின் பெயரில் உள்ளது. அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் மனைவியின் அக்கா மகன் வினோத்தின் மாமனாரான ராஜேந்திரன் என்பவருடன் 2011ல் JOINT VENTURE AGREEMENT போட்டு அங்கு ஒரு அப்பார்ட்மெண்ட் கட்ட திட்டமிட்டனர். ஆனால், பல்வேறு காரணங்களால் பணிகள் காலதாமதமானது. இந்நிலையில் எனது இடத்தை வேறு ஒருவருக்கு விற்கும் முயற்சியை ராஜேந்திரன் மேற்கொண்டார். மேலும் அந்நிலத்தில் பொது மக்கள் பயன்பாட்டிற்கென அரசுக்கு தானமாக வழங்கிய நிலமும் உள்ளது. அதையும் பட்டா போட்டு விற்று வருகிறார். அத்துடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு குடமுருட்டி ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். எனவே அதற்காக நாங்கள் 2009ல் லேயே பொதுப் பணித்துறையின் அனுமதி பெற்று பாலம் கட்டினோம்.
அரசுக்கு வழங்கப்பட்ட நிலம் மற்றும் எங்கள் நிலத்தையும் அவர்கள் விற்று வருகின்றனர் என்பதால் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். ஆனால் நீதிமன்ற வழக்கை மறைத்து இது வரை பத்துக்கும் மேற்பட்டவர்களிடம் எங்கள் இடத்தை ராஜேந்திரன் விற்று வருகிறார்.
16.60 ஏக்கர் நிலத்தில் எனக்கு என் தாயார் தான செட்டில்மெண்டாக கொடுத்த 1.60 ஏக்கர் நிலமும் அதில் உள்ளது. என் இடத்தை இணைத்தே அவர்கள் JOINT VENTURE AGREEMENT செய்துள்ளனர். இவர்களின் மோசடி தெரிந்து 2015 இறுதியிலேயே நான் அவர்களுக்கு கொடுத்த பவர் பத்திரத்தையும், போட்ட ஒப்பந்தத்தையும் ரத்து செய்துவிட்டேன்.
அதாவது, அவர் விற்கும் இடத்திற்கு செல்ல சொந்தமாக பாதையும் இல்லை. விற்கும் இடத்தின் மீது நீதிமன்ற வழக்கும் உள்ளது. ஆனால் இவ்விரண்டையும் மறைத்து, அதாவது, இல்லாத பாதையை இருப்பதாகவும், இருக்கும் நீதிமன்ற வழக்குகளை இல்லை என்றும் கூறி மனையை விற்று வருகின்றனர்” என்றார்.
நிலத்தை கிரையம் செய்யும் அப்பாவி மக்கள் ஏமாறக் கூடாது என்பதற்காக உண்மையை விளக்கி வாட்ஸ்அப்பில் பல பதிவினை வெளியிட்டுள்ளோம். அத்துடன் நாளிதழில் பொது அறிவிப்பும் வெளியிட்டோம். மேலும் தமிழக முதல்வரின் சிறப்பு பிரிவிற்கும், திருச்சி காவல் ஆணையர், டிஐஜிக்கும் புகார் கொடுத்துள்ளோம்” என்றார்.
இப்பிரச்சனை குறித்து நாங்கள் செய்தி வெளியிட்டதால், கட்சி பின்புலத்தில் இருந்து கொண்டு எங்களை பல விதங்களில மிரட்டியும் அச்சுறுத்தியும் வருகின்றனர்.
எங்களது இப்போதைய ஒரே நோக்கம், ராஜேந்திரனுக்கு உரிமையில்லாத இடங்களை அவர் விற்பதால், வாங்குபவர்கள் ஏமாறக் கூடாது என்பதால் தான் நாங்கள் இது குறித்து பொது வெளியில் பேசுகிறோம். மேலும் அரசு நிலம் மீட்கப்பட வேண்டும். எங்களுக்குரிய இடம் எங்களுக்கு சொந்தமாக திரும்பக் கிடைக்க வேண்டும்” என கூறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.