தலைப்பு செய்திகள்
மதிமுகவில் துரை வைகோவுக்கு பொறுப்பு கொடுத்ததை எதிர்த்து வந்த 3 மாவட்ட செயலாளர்கள் கட்சியில் இருந்தது அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மதிமுகவில் துரை வைகோவுக்கு பொறுப்பு கொடுத்ததை எதிர்த்து வந்த 3 மாவட்ட செயலாளர்கள் கட்சியில் இருந்தது அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மதிமுக பொதுச் செயலாளராக இருக்கும் வைகோ வயது முதிர்வு காரணமாக அரசியலில் சற்று ஓய்வு எடுக்கத் தொடங்கிவிட்டார். இதனால், தனது மகன் துரை வைகோவுக்கு கட்சியில் பொறுப்பு வழங்க முடிவு செய்தார். இதற்காக கட்சியின் பொதுக்குழுவை கூட்டி வாக்கெடுப்பு நடத்தினார். அதில் பலர், துரை வைகோவை மதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று தங்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர். அதே நேரத்தில், துரை வைகோவை கட்சிக்குள் சில மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த எதிர்ப்பை மீறி துரை வையாபுரிக்கு தலைமைக் கழக செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதற்கும் பொதுக்குழு ஒப்புதல் வழங்கியது. துரை வையாபுரிக்கு பொறுப்பு வழங்கப்பட்டதைக் கண்டித்து மதிமுகவின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, சிவகங்கை, விருதுநகர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்த நிலையில், இந்த ஒப்புதலானது வழங்கப்பட்டது.
இந்நிலையில், சிவகங்கை மாவட்ட செயலாளர் செவந்தியப்பன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் டி.ஆர்.செங்குட்டுவன், விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முக சுந்தரம் ஆகியோரை இன்று கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளார் வைகோ. மதிமுக பொதுக்குழுவில் பங்கேற்காமல் கருத்து தெரிவித்து வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்கள் மீதான புகார் குறித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் விளக்கம் அளிக்கலாம் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
