BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தீவிரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு செயல்படுகிறது!: ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு குற்றச்சாட்டு..!!

தீவிரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு செயல்படுகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மிகவும் ஆபத்தான இயக்கம் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருக்கிறார். சென்னையில் கல்லூரியில் மறைந்த லெப்டினென்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ராவின் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், நாட்டையே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சீர்குலைப்பதாக குற்றம்சாட்டினார்.


மாணவர்கள், மனித உரிமை இயக்கங்கள் போல் முகமூடி அணிந்து இயங்கி வருகின்றனர். அரசியல் லாபத்துக்காக வன்முறையை தூண்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே என்று கருத்து தெரிவித்தார்.

தீவிரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு செயல்பட்டு வருவதாகவும் ஆளுநர் விமர்சனம் செய்தார். அரசியல் லாபத்துக்காக வன்முறையை தூண்டுவதை ஏற்க முடியாது என்று ஆளுநர் ரவி கடுமையான குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )