தலைப்பு செய்திகள்
மாதவரம் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் – கே.என்.நேரு.

மாதவரம் பகுதியில் 1,246 தெருக்களில் பாதாள சாக்கடை இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர், இதனால் நிலத்தடி நீர் மாசு அடைந்துள்ளது. அதை சரி செய்து கொடுக்க வேண்டும் என மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ”சென்னை மாநகராட்சி பகுதிகளில் அண்ணா நகர், போட் கிளப், அடையார் போன்ற இடங்களில் சொத்து வரி 1 சதுர அடிக்கு 1.30 ரூபாய் தான் கட்டுகிறார்கள். ஆனால் மாதவரத்தில் மக்கள் 1 சதுர அடிக்கு 3 ரூபாய் செலுத்துகிறார்கள்.அதேபோல் வணிக வளாகத்திற்கு 10 ரூபாய் வரை வரி கட்டுகிறார்கள்.செல்வந்தர்கள் வசிக்கும் இடத்தில் வரி குறைவாக இருக்கும் சூழலில் ஏழைகள் வசிக்கும் பகுதியில் குறைக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், தனியாரிடம் இருந்து உரிய நிவாரணம் பெற்று வழங்கப்படும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
