தலைப்பு செய்திகள்
தமிழகத்தில் எந்த வித மின்தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்.

தமிழகத்தில் எந்த வித மின்தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர்; தமிழகத்தில் எந்த வித மின்தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மே 1-8 வரை 5,94,000 யூனிட் மின்சாரம், ரூ.12 என்ற அளவில் எக்ஸ்சேஞ்ச் முறையில் கொள்முதல் செய்து மின் தேவை சரிசெய்யப்பட்டது. தமிழ்நாட்டில் உச்சபட்சமாக 16,000 மெகாவாட் மின்தேவை எந்த பிரச்சனையும் இன்றி பூர்த்தி செய்யப்பட்டது. ஏப்ரலில் 17 நாட்களும், மே 9 வரை உச்சபட்ச மின் தேவை 16,000 மெகா வாட் எந்த பிரச்னையும் இன்றி கொடுக்கப்பட்டது.
புறம்போக்கு நிலங்களில் பட்டா இல்லாதவர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் வெளிமாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த காலங்களை விட தற்போது கூடுதலாகவே மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எந்த இடத்திலாவது மின் தடை ஏற்பட்டால் பராமரிப்பு பணி அல்லது பழுது காரணமாகவே இருக்கும். எம்.எல்.ஏ.க்களுக்கு கூடுதல் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும் கூறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
