தலைப்பு செய்திகள்
ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மருத்துவமனை!! அதிரடி அறிவிப்பு!!

தமிழக சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.தமிழக சட்டசபையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அந்தந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டசபையில், ‘‘ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மருத்துவமனை அமைக்கப்படும்’’ என்று கூறியுள்ளார்.அவர் கூறும்போது, ‘‘முதல்வர் மு.க.ஸ்டாலின் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் திட்டம் குறித்து சமீபத்தில் அறிவித்தார். சென்னையில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. அதன் படி வார்டுக்கு ஒரு மருத்துவமனை என மொத்தம் 200 மருத்துவமனை அமைக்கப்படும். இதன் மூலம் மக்கள் பெரிய மருத்துவமனைகளில் அதிகமாக கூடுவதை தவிர்க்க முடியும்’’ என்று கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, ‘‘இந்த ஆண்டு இறுதிக்குள் தஞ்சாவூரில் திருக்காட்டுப்பள்ளியில் பிரேத பரிசோதனைக் கூடம் புதிதாக கட்டி முடிக்கப்படும். கடலூரில் ஆரம்ப சுகாதார மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு கலை கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவுகளை தொடங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும். முதுகலை படிப்புகள் அரசு கல்லூரிகளில் தொடங்க ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் இன்றோடு முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
