தலைப்பு செய்திகள்
மீண்டும் மசூதி ஒலிப்பெருக்கியால் சர்ச்சை! மே15ம் தேதிக்குள் அகற்ற வேண்டும்! மாநில அரசு உத்தரவு!
அனுமதி பெறாமல் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிப் பெருக்கிகளை 15 நாட்களுக்குள் அகற்றுமாறு கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் இந்து அமைப்பினர், மசூதிகளில் ஒலிப்பெருக்கி மூலம் தொழுகை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதைத் தொடர்ந்து கோயில்களிலும் ஒலிப்பெருக்கி அமைத்து பாடல்களை ஒலிப்பரப்பி ஏட்டிக்கு போட்டியாக நடந்து கொண்டனர்.
இது குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனைகளை மேற்கொண்டார். பின்னர் அவர் கூறும் போது, ‘‘அனுமதி பெறாமல் பொருத்தப்பட்டிருக்கும் ஒலி பெருக்கிகளை அகற்றுமாறு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசின் தலைமை செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ஒலி மாசு தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில் அனுமதி பெறாத ஒலிப்பெருக்கிகளை வருகிற 15ம் தேதிக்குள் அகற்ற வேண்டும். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனால் மசூதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு சில ஒலிப்பெருக்கிகள் அகற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அசம்பாவிதங்கள் எதுவும் நடந்து விடாத வண்ணம் கர்நாடக மாநில போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கர்நாடகத்தில் ஹிஜாப் சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தற்போது ஒலிப்பெருக்கிகள் அகற்றப்படுவதால் மேற்கொண்டு எந்த பிரச்சினையும் எழுந்து விடக் கூடாது என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.