BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

கொரோனா காலத்தில் பணியாற்றிய தற்காலிக செவிலியர்களுக்கு மீண்டும் பணியமர்த்த வேண்டும் என உலக செவிலியர் தினத்தில் அரசுக்கு கோரிக்கை.

 

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக உயிரையும் துச்சமாக மதித்து பணியாற்றி கொரோனா காலத்தில் உயிரிழந்த செவிலியர்கள் அனைவருக்கும் முதல்வர் அவர்கள் குடும்பத்தை அழைத்து கௌரவிக்க வேண்டும்.

கொரோனா காலத்தில் பதவி உயர்வு என்பது இல்லாமல் உள்ள நிலையில் அவர்களுக்கு பதவி உயர்வை வழங்க வேண்டும். பெருந்தொற்று காலத்தில் பணியாற்றிய தற்காலிக செவிலியர்கள் அவர்களையும் மீண்டும் பணியமர்த்த வேண்டும்.

7 ஆண்டுகளாக தொகுப்பூதிய செவிலியராக பணியாற்றும் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

வளர்மதி தமிழ்நாடு நர்சுகள் சங்க மாநில செயலாளர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )