தலைப்பு செய்திகள்
மேயர் என்றால் சும்மாவா! மொத்த செலவையும் ஏற்கனும்! மறைமுகத் தேர்தலில் போட்டியை குறைக்க புதிய ஐடியா!
சென்னை: மேயர் மற்றும் நகராட்சி சேர்மன் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் மார்ச் 4-ம் தேதி நடைபெறும் நிலையில், அதில் போட்டியிட விரும்புபவர்களிடம் ஆளுங்கட்சி தரப்பில் நிபந்தனை ஒன்று விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் செலவுக்காக இதுவரை கவுன்சிலர்களுக்கு செலவழிக்கப்பட்ட தொகையை, மேயராக வர விரும்பும் நபர் மொத்தமாக செலுத்த வேண்டும் என்பது தான் அந்த நிபந்தனை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிபந்தனையை ஏற்று கோடிக்கணக்கில் கூட செலவுத் தொகையை ஏற்க பல மாநகராட்சிகளில் ஆட்கள் தயாராக இருக்கிறார்களாம்.
உள்ளாட்சித் தேர்தல் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் திருவிழா நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலையோடு ஓய்ந்தது. பரோட்டா சுட்டுக் கொடுப்பது, துணி துவைத்துக் கொடுப்பது, தேநீர் ஆற்றிக் கொடுப்பது, வடை சுட்டது என வேட்பாளர்கள் கொடுத்த பில்டப்களால் வாக்காளர்கள் விழுந்து விழுந்து சிரித்ததோடு மட்டுமல்லாமல், தங்கள் வீட்டு படியேறி மாறி மாறி ஓட்டுக்கேட்டவர்களிடம் வஞ்சகம் இன்றி தலையாட்டி அனைவரையும் அனுப்பி வைத்தனர்.
மறைமுகத் தேர்தல்
இந்நிலையில் மக்கள் யாருக்கு தான் ஓட்டுப்போட்டார்கள் அவர்களின் தேர்வு யார் என்பது நாளை தெரியவந்துவிடும். மக்களால் நேரடியாக ஓட்டுப்போட்டு கவுன்சிலராக நாளை தேர்வாக உள்ளவர்கள், மார்ச் 4-ம் தேதி நடைபெறும் மறைமுகத் தேர்தலில் மேயர் மற்றும் நகர்மன்ற தலைவர்களை ஓட்டுப்போட்டு தேர்வு செய்யவுள்ளனர். இதனால் நாளை வெற்றிபெறும் கவுன்சிலர்களுக்கு கவனிப்பு பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேயர் பதவி இதனிடையே மேயர் பதவி என்றால் சும்மாவா என்கிற வகையில் ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளர்கள் சிலர், யார் மேயர் பதவிக்கு போட்டியிட விரும்புகிறீர்களோ, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு செலவழிக்கப்பட்ட தொகையை மொத்தமாக கொடுக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கவுள்ளார்களாம். இதன் மூலம் போட்டி குறையும் என்றும், மேயர் வேட்பாளர்களை வடிகட்டலாம் எனவும் கருதுகிறார்களாம்.
கடும் போட்டி ஆனால் இதற்கும் ஓகே சொல்லி வைட்டமின் ‘ப’வுடன் ஒவ்வொரு மாநகராட்சியிலும் மூன்று பேர் வரை மேயர் பதவிக்கு முட்டி மோதுகிறார்களாம். குறிப்பாக சிவகாசி, திண்டுக்கல், கோவை, கரூர், நெல்லை மாநகராட்சிகளில் மேயர் வேட்பாளராக களமிறங்க ஆளுங்கட்சி தரப்பில் கடும் போட்டி நிலவுகிறதாம். இதனிடையே எந்தெந்த மாநகராட்சிகளில் எந்தெந்த கட்சிகள் அதிக இடங்களை பெற்றிருக்கிறது என்ற விவரமே நாளை பிற்பகலுக்கு மேல் தான் முழுமையாக தெரியவரும் என்பது
CATEGORIES Uncategorized