BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

குடும்ப அட்டை விவரங்களை திருத்த அரிய வாய்பு வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கும் பொருட்டு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், 14/05/2022-ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டைக்கு மனு செய்தல், கைப்பேசி எண் பதிவு செய்தல், குடும்பத் தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் ஆகியவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், பொது விநியோகத்திட்ட பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதனையும் இம்முகாமில் அலுவலர்களிடம் தெரிவித்து பரிகாரம் காணலாம்.

எனவே, இம்முகாமில் மனுதாரர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் ஆவணங்களின் ஒளி நகளுடன், தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகங்களில் அரசு வகுத்துள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக் கவசம் அணிதல், சமுக இடைவெளி கடைபிடித்தல் மற்றும் கிருமி நாசினி உபயோகித்தல் உள்ளிட்டவைகளை தவறாமல் கடைபிடித்து முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன், கேட்டுக்கொண்டுள்ளார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )