தலைப்பு செய்திகள்
ஆம்பூரில் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆன இளம் பெண் அடித்துக் கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவன் மற்றும் குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி காவல்நிலையத்தை முற்றுகையிட்ட இளம்பெண்ணின் உறவினர்கள்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சாமியார் மடம் பகுதியை சேர்ந்த ராஜாமணி இவருக்கும் ஓசூர் பகுதியை சேர்ந்த முரளி என்பவரின் மகள் நந்தினி (26) என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது தற்போது மூன்று வயதில் மகள் ஒருவர் உள்ள நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே ராஜாமணிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும்,இதனால் அடிக்கடி கணவன்-மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், நாளடைவில் நந்தினியை குழந்தையை ராஜாமணியின் அக்கா லட்சுமியிடம் கொடுத்து விடுமாறும் , நந்தினியின் உறவினர்கள் யாரும் உன்னை பார்க்க வரக்கூடாது என நந்தினிக்கு ராஜாமணி மற்றும் அவரது அக்கா லட்சுமி ஆகியோர் கட்டளையிட்டு தொடர்ந்து கொடுமைப் படுத்தி வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் இன்று ஆம்பூர் சாமியார் மடம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் நந்தினி தலையின் பின்புறம் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார் இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆம்பூர் நகர போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தன்னுடைய மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி நந்தினியின் தந்தை முரளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் மேலும் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆன நிலையில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையிலான வருவாய்த்துறையினர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டதில் தலையின் பின்புறம் ரத்தம் கசிந்த நிலையில் காயம் இருப்பதை அறிந்து அடித்துக் கொலை செய்து இருக்கலாம் என சந்தேகமடைந்த கோட்டாட்சியர் நந்தினியின் கணவர் ராஜாமணியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொள்ள காவல் துறைக்கு பரிந்துரை செய்துள்ளார்
மேலும் மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவர் ராஜாமணி மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்யக்கோரி நந்தினியின் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் காவல்துறையினர் ராஜாமணியை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன