BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 74 து பிறந்த நாள் விழா – உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின்
74வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், நிர்வாகிகள்
அவரது கட்சியினர்
ஜெயலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் , மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாநகர மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் தென்னூர் உழவர் சந்தை அருகில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையே தொடர்ந்து அவர் பேசுகையில் மீண்டும் தமிழகத்தில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை கொண்டுவர பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் நிர்வாகிகள் கார்த்திகேயன், மலைக்கோட்டை ஐயப்பன், மலையப்பன், மகாலட்சுமி, வெல்லமண்டி ஜவகர் உட்பட 100க்கு மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )