தலைப்பு செய்திகள்
நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவியை மறைமுகமாக கைப்பற்ற சில அரசியல்வாதிகள் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து.
நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவியை மறைமுகமாக கைப்பற்ற சில அரசியல்வாதிகள் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்-மேலும் மாவட்டத்தில் காவல்துறையின் தரத்தை உயர்த்த நடவடிக்கை தேவை காவல் கண்காணிப்பாளர் என்பதை மாற்றி காவல் ஆணையர் என்ற அந்தஸ்துக்கு வந்தால் மட்டுமே சட்ட ஒழுங்கை கட்டுக்கோப்பாக வைத்து இருக்க முடியும் என சமூக ஆர்வலர்.ஜாண் விக்டர்தாஸ் கருத்து.
கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகராக விளங்கக் கூடிய நாகர்கோவில் மாநகராட்சிக்கு முதல் மேயர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது, இதில் திமுக 24 வார்டுகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையை நிரூபித்துள்ளது மேலும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 7 இடங்களில் வெற்றி பெற்று 32 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது,அதேபோன்று கடந்த முறை நாகர்கோவில் நகராட்சி தேர்தலில் நகர்மன்றத்தை கைப்பற்றிய பாஜக தற்போது 11 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது,அடுத்தப்படியாக அதிமுக 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது, சுயேட்சை இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது,இந்நிலையில் மேயர் பதவி திமுக தரப்பு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது,
இருப்பினும் கூட அரசியலில் செல்வாக்கு மிக்கவர்கள் மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள் நகர்மன்ற தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என திமுகவில் போட்டி நிலவுகிறதாக பேசப்படுகிறது,இதை பயன்படுத்தி பாஜக மேயர் பதவிக்கு முனைப்பு காட்டி வருவதாக தெரியவந்துள்ளது,இதற்கு குதிரை பேரம் நடைபெறுவதாகவும் மேலும் இது குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்த நிலையில் நாகர்கோவில் சமூக ஆர்வலர் ஒருவர் இது குறித்து கூறும்போது நாகர்கோவில் மாநகராட்சி மேயருக்கு பல்வேறு சவால்கள் காத்து உள்ளது குறிப்பாக நீண்ட காலங்களாக முடியாமல் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை பணிகள் அதைப்போன்று நாகர்கோவில் மையப்பகுதி அமைந்துள்ள வலம்புரி குப்பைக்கிடங்கு இதனால் அப்பகுதியில் துர்நாற்ற பகுதியாக மாறியுள்ளது மாற்றித்தர பல்வேறு அரசியல்வாதிகள் வாக்குறுதி அளித்த நிலையில் இன்றும் செயல்படாமல் உள்ளத,அதே போன்று தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனை என்பன போன்ற மக்கள் பணியின் சவால்கள் காத்துள்ளது,அதேநேரத்தில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவியை தட்டுத்தூக்க குதிரை பேரம் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார், மேலும் மாவட்டத்தில் காவல்துறையின் தரத்தை உயர்த்த நடவடிக்கை தேவை காவல் கண்காணிப்பாளர் என்பதை மாற்றி காவல் ஆணையர் என்ற அந்தஸ்துக்கு வந்தால் மட்டுமே சட்ட ஒழுங்கை கட்டுக்கோப்பாக வைத்து இருக்க முடியும் என சமூக ஆர்வலர் செய்தியாளரிடம் கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போது முதல் நாகர்கோவில் வடசேரி சந்தை பகுதிக்கும் அண்ணா சிலை முன்பு செல்லும் சாலை அருகே நம்ம நாகர்கோவில் என்று பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ள அலங்கார பதாகை அனைவரையும் கவர்ந்துள்ளது அவ்வழியே செல்லும் பொதுமக்கள் தங்கள் செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர் இதனால் அங்கு எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது.