BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

திருக்காட்டுப்பள்ளி அடுத்துள்ள மைக்கேல்பட்டியில் தற்கொலை செய்துகொண்ட லாவண்யாவின் நினைவு ஒளியேற்றும நிகழ்ச்சி.

திருக்காட்டுப்பள்ளி அடுத்துள்ள மைக்கேல்பட்டியில் தற்கொலை செய்துகொண்ட லாவண்யாவின் நினைவு ஒளியேற்றும நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருச்சிக்கு விமானம் மூலம் வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் நகர்புறஊராட்சி தேர்தல், நகர் மன்றத் தேர்தல், அனைத்திலும் திமுக கூட்டணிக்கு மக்கள் அமோக வெற்றியை வழங்கியுள்ளனர்.
நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சுமார்
55 சதவீத இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். திருச்சியில் ஒரு இடமும் சென்னையில் 4 இடமும் மதுரையில் ஒரு இடம் என வெற்றி பெற்றுள்ளோம். பல பொது இடங்களில் போட்டியிட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம்.
வெற்றி பெற்ற மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஆகிய இடங்களில் மேயர் துணை மேயர் நகர்மன்ற தலைவர் ஆகிய இடங்களுக்கு வாய்ப்புள்ள இடங்களில் அளிக்குமாறு முதல்வரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.
அந்தக் கோரிக்கைகளை பரிசீலிக்க என்ற நம்பிக்கை உண்டு.

நாங்கள் நல்லிணக்கத்தோடு பேசி இடங்களைப் பெற்று தேர்தலை சந்தித்து கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம்.
திருச்சியில் துணை மேயரும் கடலூரில் மேயரும் 9 நகராட்சிகளில் துணை மேற்கொண்டுள்ளோம் கேட்பது எங்களது கடமை விருப்பம்.

திமுக பெற்ற வெற்றி இதற்கான வெற்றி என்ன ஓ பன்னீர்செல்வம் கூறி உள்ளார் என்ற கேள்வி பதில் அளித்த அவர்

தங்களது தோல்வி இப்படித்தான் நியாயப்படுத்த முடியும் எனவே ஓபிஎஸ் அவர்கள் இப்படிக் கூறியுள்ளார்.

அதிமுக விட அதிக வாக்குகள் பெற்றுள்ளது என பிஜேபியினர் பெருமை அடிக்கிறார்கள் இது அதிமுகவை சிறுமைப்படுத்துகிற செயல்.
இப்போதாவது அதிமுக புரிந்துகொள்ளவேண்டும் இனியும் பிஜேபியை அதிமுக தோளில் தூக்கி சுமக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )