தலைப்பு செய்திகள்
ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கும் வகையில் பள்ளி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி.
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஸ்டெல்லா மேரிஸ் சிபிஎஸ்இ தனியார் பள்ளி சார்பில் ஆரோக்கியமான இந்தியாவை மீண்டும் உருவாக்கும் நோக்கில் மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி நடைப்பெற்றது,இதில் ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் சாலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சினிமா பாடலுக்கு நடனமாடினர்,இது சாலையில் செல்பவர்களை வெகுவாக கவர்ந்தது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதயில் அமைந்துள்ள ஸ்டெல்லா மேரிஸ் சிபிஎஸ்இ பள்ளி சார்பில் ஆரோக்கியமான இந்தியாவை மீண்டும் உருவாக்கும் வகையில் மாணவ மாணவிகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்,
அந்த வகையில் இன்று நாகர்கோவில் ஆட்சியாளர் அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் சினிமா பாடலுக்கு சாலையில் நடனம் ஆடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்,
இதில் கொரோனா நோய்தொற்று காலத்தில் வீட்டில் முடங்கி இருந்து பல்வேறு சூழ்நிலையில் மன அழுத்தத்தில் இருக்கும் நபர்கள் அந்த நிலையை மாற்றி சகஜ நிலைக்கு வரவேண்டும், போதைப் பழக்கத்தில் இருக்கும் இளைஞர்கள் அதிலிருந்து மீண்டு வர வேண்டும்,தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பன போன்ற நல்ல பழக்க வழக்கங்கள் மூலம் ஆரோக்கியமான இந்தியாவையும் ஆரோக்கியமான உடலையும் பேன முடியும் என்பதை வலியுறுத்தும் விதமாக பள்ளி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு நடன நிகழ்ச்சியை சாலைகளில் அரங்கேற்றப்பட்டது,இந்த நடன நிகழ்ச்சியை சாலையில் செல்பவர்கள் பார்த்து சென்ற நிலையில் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.