BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பில் தோற்ற வேட்பாளர் ரம்யா வேணுகோபால் பொது மக்களுக்கு மர கன்று கொடுத்து வரும் பணி குறித்து பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோற்றாலும் வெற்றி பெற்றாலும் வேட்பாளர்கள் அந்தந்தப் பகுதிகளில் மரக்கன்றுகளை கொடுப்பார்கள் என
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் முன்பே தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 63 வது வார்டு ராமநாதபுரம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டவர் ரம்யா வேணுகோபால் அந்தப்பகுதியில் திமுகவைச் சேர்ந்த சாந்தி முருகன் என்பவர் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட ரம்யா வேணுகோபால் தோற்றாலும் அவர் 600 வாக்குகள் பெற்றிருந்தார். தேர்தலில் தோல்வியை எதிர் கொண்டாலும் மக்களுக்கான பணிகளை தாங்கள் தொடர்ந்து மேற் கொள்வோம் என்ற கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு அப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நெல்லிக்காய் செடி, பொன்னாங்கண்ணி கீரை செடி, நாவல் பழம் செடி உள்ளிட்ட மரக்கன்றுகளை அவர் கொடுத்து வருகிறார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இதுபோன்ற தேர்தல் தோல்விகள் தங்களது பணியை தொய்வடைய செய்யாது என்றும், தொடர்ந்து மக்கள் சார்ந்த பணிகளை மக்கள் நீதி மய்யம் மேற்கொள்ளும் என்றும் கூறினார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )