தலைப்பு செய்திகள்
கொடைக்கானல் நகர்மன்ற துணைத் தலைவர் பதவி சிறுபான்மை கிறித்துவ மகளிருக்கு வழங்க தமிழக முதல்வருக்கு பொது மக்கள் வேண்டுகோள்.
கொடைக்கானல் நகர்மன்ற துணைத் தலைவர் பதவி சிறுபான்மை கிறித்துவ மகளிருக்கு வழங்க தமிழக முதல்வருக்கு பொது மக்கள் வேண்டுகோள்.
கொடைக்கானலில் நடைபெற்ற நகர்மன்றத் தேர்தலில் 24−வார்டுகளில் சுமார் 20−வார்டுகளை கைப்பற்றி திமுக நகர்மன்றத்தை கைப்பற்றியுள்ளது.
ஏற்கனவே கொடைக்கானல் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் கொடைக்கானலில் மொத்த வாக்காளர்கள் 29−ஆயிரத்து 741 இதில் கிறித்தவ வாக்காளர்கள் 18−ஆயிரத்து 736 பேரும்,இந்து வாக்காளர்கள் ஆறாயிரத்து 841−வாக்காளர்களும்,இஸ்லாமியர்கள் நான்காயிரத்து 164−வாக்காளர்களும் உள்ளனர்.
கொடைக்கானலில் அதிகமாக கிறித்துவ சிறுபான்மையினர் வாக்காளர்கள் சுமார் 63−சதவீதத்தினரும், இந்துக்கள் 23−சதவீதத்தினரும், இஸ்லாமியர்கள் 14−சதவீதத்தினரும் உள்ளனா்.
மேலும் கொடைக்கானலில் அனைத்து அரசியல் கட்சிகளில்(அஇஅதிமுகவைத் தவிர்த்து) இஸ்லாமியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே முக்கிய பொறுப்புகளை வகித்து வருகின்றனர்.
மேலும் கடந்த 25−ஆண்டுகளுக்கு மேலாக கொடைக்கானலில் அதிக வாக்காளர்கள் கொண்ட கிறிஸ்த்துவ. மதத்தை சேர்ந்த
ஒரு படித்த மகளிருக்கும் கிறித்துவ சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிருக்கு கொடைக்கானல் நகர்மன்ற துணைத் தலைவராக நியமனம் செய்ய வேண்டுமென தமிழக முதல்வரும்,திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அமைச்சரும் திண்டுக்கல்கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கொடைக்கானல் பொது மக்களின் கோரிக்கையாகும்.