தலைப்பு செய்திகள்
ஸ்டாலினின் நல்லாட்சிக்கு அடித்தளம் அண்ணாவின் கனிவே, கலைஞரின் துணிவே. திமுக சிறப்புப் பட்டிமன்றம்.
கோவை தெப்பக்குளம் பகுதியில் “தமிழக முதல்வர் தளபதியாரின் நானிலம் போற்றும் நல்லாட்சிக்கு அடித்தளம் அண்ணாவின் கனிவே, கலைஞரின் துணிவே” என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.
கோயம்புத்தூர்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (மார்ச் 1) தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினர். இதையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், தொண்டர்கள் என பலரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பின் கொண்டாடும் முதல் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் திமுக நிர்வாகிகளால் மற்றும் தொண்டர்கள் ஸ்டாலின் பிறந்தநாளை கூடுதல் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை தெப்பக்குளம் பகுதியில் “தமிழக முதல்வர் தளபதியாரின் நானிலம் போற்றும் நல்லாட்சிக்கு அடித்தளம் அண்ணாவின் கனிவே, கலைஞரின் துணிவே” என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. இந்த பட்டிமன்றத்தில் திமுக கழக கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் லியோனி நடுவராகப் பொறுப்பு வகித்தார்.
இந்த நிகழ்வில் தலைமை உரையாற்றிய மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நடந்த முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் திமுகவிற்கு மகத்தான வெற்றியைப் பெற்றுத் தந்த வாக்காளர்களுக்கு நன்றி. முதலமைச்சரின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகக் கோவை அரசு மருத்துவமனையில் நேற்று பிறக்கின்ற குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் தரும் நிகழ்ச்சி இரண்டொரு தினங்களில் நடைபெற உள்ளது.
வருகின்ற 6 ஆம் தேதி கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என 152 இடங்களில் மகளிர், ஆண்கள், இளம் வயதினர் ஆகியோருக்காக தனித்தனியாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. கோவை மாநகராட்சியில் இரண்டு தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யச் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு தந்துள்ளார். மேலும், கோவைக்கு முதலமைச்சர் இடத்தில் தனி இடம் உள்ளது.
கோவையில் சாலைகளைச் சீரமைக்க ரூ.200 கோடியும் தெரு விளக்குகளை அமைப்பதற்காக ரூ.70 கோடி நிதியை வழங்கி உள்ளார்” எனத் தெரிவித்தார். பட்டிமன்றம் தொடங்குவதற்கு முன் பட்டிமன்ற பேச்சாளர்களுக்கு அமைச்சர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.