BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

திருச்சியில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் 200க்கும் மேற்பட்ட கட்சியினருடன் அதிமுக வேட்பாளர் தீவிரம் வாக்கு சேகரிப்பு.

தமிழகத்தில் நாளை மறுநாள் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் இன்று திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்,

இதன் ஒரு பகுதியாக திருச்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் 33வது வார்டு வேட்பாளர் சீனிவாசன் காலை முதலே சுமார் 200க்கும் மேற்பட்ட கட்சியினருடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் அப்பகுதியில் வரும் திமுகவினருக்கும் பொன்னாடை போர்த்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து கீழப்புதூர், துரைசாமிபுரம், அந்தோணியார் கோயில் தெரு,
தனமணி மில் காலனி,
உள்ளிட்ட 24 வார்டுக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

Share this…

CATEGORIES

COMMENTS Wordpress (0) Disqus ( )