BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

காதல் தகராறில் பெற்றோருடன் செல்ல மறுப்பு. விடுதியில் தங்க வைக்கப்பட்ட இளம்பெண் திடீர் மாயம்.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண். இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே பாபநாசம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அப்போது அந்த பெண் தனது பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை என கூறினார். இதனால் அந்தப் பெண்ணை பாபநாசம் போலீசார் தஞ்சை அருளானந்தம் நகரில் உள்ள குறுகிய கால பெண்கள் தங்கும் விடுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி தங்க வைத்தனர்.


இந்த நிலையில் அந்தப் பெண் ஒரு கடிதம் எழுதி தனது அறையில் வைத்துவிட்டு வேலைக்கு சென்று வருகிறேன் என கூறி வெளியே சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் விடுதிக்கு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதி நிர்வாகத்தினர் பல இடங்களில் அந்த பெண்ணை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து விடுதி நிர்வாகி ஸ்டெல்லா தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகிறார். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )