தலைப்பு செய்திகள்
காதல் திருமணத்தால் தந்தை வெட்டிக்கொலை !

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் நேற்று நள்ளிரவு ராமச்சந்திரன் என்பவரை சடையாண்டி என்பவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார் இதையடுத்து சடையாண்டி அரிவாளுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
விசாரணையில் கொலைக்கான காரணம் குறித்து தெரிய வந்துள்ளது. சாதி மாற்றி தன் மகள் ராமச்சந்திரனின் மகனை திருமணம் செய்து கொண்டதால் தான் மருமகனின் தந்தையை கொலை செய்தேன் என சடையாண்டி போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

மதுரையில் திடீர் நகரைச் சார்ந்த சடையாண்டி என் மகள் சினேகா இவர் அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரனின் மகன் சிவா பிரகாஷ் என்பவரை பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதலித்து கலப்பு திருமணம் செய்துள்ளார்.இவர்கள் பாதுகாப்பு கேட்டு திடீர் நகர் காவல் துறையினரிடம் சரண் அடைந்துள்ளார்.
இதையடுத்து நேற்று நள்ளிரவு சடையாண்டி ராமச்சந்திரனை பேச்சுவார்த்தைக்காக பெரியார் பேருந்து நிலையத்திற்கு அழைத்து உள்ளார். பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறிய நிலையில் ஆத்திரமடைந்த சடையாண்டி ராமச்சந்திரனை தன் மகன் மகளின் மாமனார் எனவும் பாராமல் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
