தலைப்பு செய்திகள்
ஆசிரியர்களுடன் மாணவர்கள் போராட்டம் !

கோவை மாவட்டத்தில் உள்ள பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அனைத்து அரசு உதவி பெறும் கல்லூரிகளும் தனியார் மயமாக்க படுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து போராட்டம் நடத்துகின்றனர் மேலும் கடந்த மூன்று நாட்களாக கருப்புக் கொடிகளை கையில் ஏந்தி போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மேலும் கல்லூரியில் 70 ஆசிரியர் பணியை நிரப்ப வேண்டும் எனவும் 42 அலுவலகப் பணிகளையும் பரப்ப வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் இதுபோன்று அரசு கல்லூரி அல்லது அரசு உதவி பெரும் கல்லூரி அனைத்தையும் தனியார்மயம் ஆக்கிவிட்டால் ஏழை மாணவர்களின் வாழ்க்கை மற்றும் படிப்பு என்ன ஆகும் என முழக்கத்தோடு 500 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
CATEGORIES கோவை
