தலைப்பு செய்திகள்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மேல கபிஸ்தலத்தில் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மேல கபிஸ்தலத்தில் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மேலகபிஸ்தலம் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் குமரவேல் என்பவரின் மகன் ஆற்றலரசன் (45). இவர் தனது பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணாமல் அதிர்ச்சியடைந்தார். உடன் இதுகுறித்து கபிஸ்தலம் போலீசில் ஆற்றலரசன் புகார் செய்தார்.
இதன்பேரில் கபிஸ்தலம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் வழக்குப்பதிவு செய்து பைக்கை திருடிச் சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
CATEGORIES தஞ்சாவூர்