தலைப்பு செய்திகள்
நத்தத்தில் இன்று மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா கொடியேற்றம் தொடங்கியது.

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா இன்று(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக மாரியம்மனுக்கு பால் இளநீர் சந்தனம் ஜவ்வாது மஞ்சள் தேன் போன்ற 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து கோவில் முன் அமைந்துள்ள திருகொடி மரத்தில் மஞ்சள் நிறத்தில் மாரியம்மன் உருவம் பொறிக்கப்பட்ட கொடி மேளதாளம் முழங்க,தீவட்டி பரிவாரங்களுடன் ஏற்றப்பட்டது.


சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அப்போது கோவில் செயல் அலுவலர் வாணிமகேஸ்வரி, பேரூராட்சி சேர்மன் சேக்சிக்கந்தர் பாட்சா, உலுப்பகுடி பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் சக்திவேல், பூசாரி வகையறாக்கள்,
முன்னாள் அறங்காவலர் குழுவினர்,முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) கன்னிமார் தீர்த்தம் அழைத்து வருதல் மற்றும் பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
