தலைப்பு செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு முதல்வர் மு.க ஸ்டாலினின் வருகையை ஒட்டி மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு முதல்வர் மு.க ஸ்டாலினின் வருகையை ஒட்டி மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்- குமரி வரும் முதல்வர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு சாலைப்பணிகளை பணிகளை ஆய்வு செய்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலைகள் மோசமாக இருப்பதாக பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்து சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர் இதனை தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு மோசமடைந்து சாலைகளை செப்பனிட நீதி வழங்கி வருகிறது மேலும் தற்போது நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளை சீர் அமைப்பதற்காக ரூபாய் 26 கோடி ஒதுக்கி உத்தரவிட்டது பணிகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் இன்று முதல்வர் முக ஸ்டாலின் குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலை பணிகளை பார்வையிட வருவதாக தெரிவித்தார்,கடந்த மாதம் பெய்த கனமழையால் பாதிக்கப்பு ஏற்பட்ட சூழலில் அதனை சீர்செய்ய உத்தரவிடப்பட்டு அதன்படி பணிகள் நடைப்பெற்று வருகிறது, அந்த பணிகளையும் பார்வையிட இன்று முதல்வர் ஸ்டாலின் குமரிமாவட்டம் வருகிறார்,அதற்காக இன்று மதியம் 2 மணி அளவில் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகை தருகிறார், அங்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவினரை சந்திக்கிறார் பின்னர் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பள்ளிகளை சாலை பகுதியில் மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிடுகிறார்,அதன் பின் பேயங்குழி பகுதியில் கன மழையால் சேதம் அடைந்த பாலம் பணி நடைப்பெற்று வருவதை பார்வையிடுகிறார்,பின்னர் குமாரகோவில் பகுயில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளைய்ம் முதலமைச்சர் பார்வையிடுகிறார்,பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்னை செல்கிறார் முதல்வர் வருகையையொட்டி நாகர்கோவில் மற்றும் மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
