தலைப்பு செய்திகள்
தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை !

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்துவிட்டது இருப்பினும் கூட வளிமண்டல சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் பல பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

குறிப்பாக நேற்றைய தினம் பல மாவட்டங்களில் வறட்சி நிலையே நிலவியது குறிப்பாக இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி விழுப்புரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு இன்று லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் நாளை அதாவது மார்ச் 13ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிறகு இலேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் காலை வேளைகளில் பனிமூட்டம் நிலவும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
