தலைப்பு செய்திகள்
தேனி மாவட்டம் லோயர் கேம்பில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கேரள மாநிலம் தேக்கடி பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்வளத்துறை அலுவலக பகுதியிலுள்ள குடியிருப்புகளில் மராமத்து பணிகள் செய்வதற்கு பொருட்கள் கொண்டு சென்றதை கேரள வனத்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனை கண்டித்து தேனி மாவட்டம் லோயர் கேம்பில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற நிலையில் அவர்களை தடுத்து நிறுத்திய தமிழக காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். விவசாயிகள் கைதால் அப்பகுதியில் பரபரப்பு.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.