தலைப்பு செய்திகள்
மக்கள் நல்வாழ்வு தொடர்பான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதில் ராமநாதபுரம் மாவட்டம் முதலிடத்தை பெற்றது.
சென்னையில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் , காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு 2022 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மூன்றாம் நாளில் நடைபெற்ற மாநாட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு தொடர்பான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதில் ராமநாதபுரம் மாவட்டம் முதலிடத்தை பெற்றது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கர்லால் குமாவத் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். உடன் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உட்பட அரசு அதிகாரிகள் பலரும் இருந்தனர்.