தலைப்பு செய்திகள்
பெட்டி பெட்டியாக போதை ஊசிகள் 4 பேர் கைது !
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியில் மருந்துப் பொருட்களை போதை ஊசியாக சிலர் பயன்படுத்துகின்றனர் என தகவல் போலீசாருக்கு கிடைத்தது. மேலும் இதனை அறிந்த காவலர்கள் உடனடியாக பல இடங்களில் சோதனை நடத்தினர் இதில் வஜ்ரவேல் என்பவர் போதை ஊசிகளை இளைஞர்களுக்கு போட்டு விடுவதாக தகவல் வந்தது.
மேலும் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார் போதை மருந்துகள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் மெடிக்கலில் இருந்து வாங்குவதாக அவர் கூறினார். அதன் பேரில் காவலர்கள் மெடிக்கல் கடைக்காரரை கைதுசெய்தனர் அதுமட்டுமின்றி மொத்தமாக பல மருந்து டப்பாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது மொத்தமாக நான்கு பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்